Monday, February 15, 2010

அப்பாவும் பனியும்

அப்பாவும் பனியும்
(வாழ்வில் முதல்முறையாக பனியைக் கண்டது அப்பாவின் பிறந்த தினத்தன்றே)

அப்பா சொல்லித் தந்த கதையொன்றில்
பனி உறைந்திருந்தது

செந்நிறப் படைவீரனொருவன்
பனியின் மீது தவழ்ந்தவாறு சென்றான்
துப்பாக்கிச்சன்னம் பட்ட காலொன்றினால்
வெண் பனிக்கட்டிகளின் மீது
செந்நிற வழித்தடம் உண்டானது
வேதனை வழிகி்ன்ற
அப்பாவின் குரலுக்கு
சிறுவன் என்றாலும் என் மனது நொந்தது

பனி போர்த்திய சமதரையொன்றில்
அவருடன் பனியில் விளையாடிக்கொண்டிருந்த இடைவேளையில்
வேலை நிறுத்தக்காரரான எனது அப்பா
சைபீரியாவுக்கு அனுப்பிய கடிதம் தபாலில் கிடைத்தது
இறுக மூடப்பட்டிருந்த இடது கைக்குத் துணையாக
சிறிய கரமொன்று இணைந்திருந்தது

ஸ்டெப்ஸ் புல்வெளியை விடவும் நீளமான பசி
பனியைப் போல மனதில் இறுகிப்போனது
சிறிய மனதால் தாங்கவே முடியாமற் போகும்
கணமொன்றும் இருந்தது
அப்பாவின் பனி உறைந்த விழிகளின் தைரியத்தில்
பனிப் பந்தொன்றுக்கு உதை கிடைத்தது

ஆனாலும் நாம் பனியிடையே தரித்தோம்
எமது முழங்கால்கள் வரை கால்கள் புதைந்தன

வெந்நீர்ப் பானையிலிருந்து எழுந்து வந்த ஆவியில்
சீனியில்லாத தேனீர்ச் சாயத்தின் சுவை நிரம்பியிருந்தது
தேனீரின் நறுமணத்தில் திறபட்ட
சாயமற்ற விழிகள் இரண்டுக்கு
கவிதை எழுதும் வழித்தடங்கள் தென்பட்டன

*இர்த்து ஊடாக நெடுந் தூரம் நடந்த
காரிருளால் முடிச்சுகளும் கேசத்தின் அலைகளும் நிறைந்த
அந்தத் தலையில் பனி இதழ்கள் உறைந்தன
ஆனாலும் அந்தக் குரலின் கூர்மை பிரகாசித்தது
அந்தக் குரலில் கதையொன்று கேட்டது

கதையில் பனி உறைந்திருந்தது

மூலம் : மஞ்சுள வெடிவர்தன (சிங்களமொழி மூலம்)
தமிழில் : ஃபஹீமாஜஹான், 

                     இலங்கை

* இர்த்து - பிரேசில் அருகே உள்ள ஓரிடம்

நன்றி 
# உன்னதம் இதழ் - டிசம்பர், 2009

6 comments:

mohamedali jinnah said...

இறைவா!
என் நிலையையும்
நினைப்பையும் சமப்படுத்துவாயாக.
நீ நாடியிருந்தால்
நிலையை உயர்த்து.
ஒரு போதும்
நினைப்பை உயர்த்தி விடாதே!

நன்றி. தொடரட்டும் உங்கள் பணி. அல்லாஹ் உங்கள் பணியை ஏற்றுக் கொள்வானாக.

Muruganandan M.K. said...

நல்ல படைப்பு.
மொழிபெயர்ப்பில் இன்னும் சற்று மெருகு ஏற்றியிருக்கலாம்.
பகிர்வுக்கு நன்றி.

Tamilish Team said...

Hi Rishan,

Congrats!

Your story titled 'அப்பாவும் பனியும்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 15th February 2010 01:00:25 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/186322

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

Unknown said...

நல்ல மொழி பெயர்ப்பு
நல்லவட்டை தேடி எடுக்கிரிர்கள்

உயிரோடை said...

ந‌ல்ல‌ க‌விதை ரிஷான். ப‌கிர்வுக்கு ந‌ன்றி

பகலவன் said...

உங்கள் வார்த்தைகள் புயலாய் வீசுகிறது ,வாழ்த்துக்கள்.