உண்மையைக் கொண்டுபோய் அடகுவைத்து
உரிமையை இரும்புச் சங்கிலி கொண்டு
சிறையிலிட்ட அந் நாளில்
திஸ்ஸ கண்டாரா
அதிகாரத்தால் உன்மத்தம் பிடித்தவோர் அரசனை
உண்மையை திரையிட்டு மூடி
புகழ் பெற்றுக்கொள்ளும் கொலைகாரர்களை
மனசாட்சிக்கு
இலக்கு வைக்கும் துறவிகளை
திஸ்ஸ கண்டாரா
உண்மையான உரிமைக்கும்
எழுதிய எழுத்துக்களுக்கும்
ஷெல்குண்டு வைத்தாலும்
திஸ்ஸ கண்டாரா
சத்தியத்தின் தாமரை
பூத்து வருவதை
மூலம் - அரவிந்த (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
* திஸ்ஸ-ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம்- தமிழர்களுக்கு ஆதரவாக எழுதியதால் இலங்கை அரசால் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி முதல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டிருந்த ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் பிணையில் (13-01-2010) விடுவிக்கப்பட்டுள்ளார்.
நன்றி
# சொல்வனம் இதழ் - 17 (22.01.2010)
6 comments:
அடக்கு முறைகள் வெற்றி பெறுவதின் மூலக் காரணங்கள் என்ன?
அருமை!
ஒரு சிங்கள மனிதராவது நியாயத்தை உணர்ந்திருக்கிறாரே என்பதில் மனம் ஆறுதலாகிறது.!
இந்த கவிஞரை விட்டு வைத்திருக்கிறார்களா அந்த அரக்கக் கூட்டம் ??
அன்புடன்
சுவாதி
//அருமை!
ஒரு சிங்கள மனிதராவது நியாயத்தை உணர்ந்திருக்கிறாரே என்பதில் மனம் ஆறுதலாகிறது.!
இந்தக் கவிஞரை விட்டு வைத்திருக்கிறார்களா அந்த அரக்கக் கூட்டம் ?? //
பொன்சேகாவின் கதியே அப்படியோ, இப்படியோ என்று ஆடிப்போய்க்கிடக்கிறது...
பொல்லாத சித்திரவதை செய்து அனுப்பி வைத்திருப்பார்கள்.
‘நடப்பது அராஜகம்...இதில் என்ன ஜனநாயகம்?
அன்பின் ராஜ நடராஜன்,
//அடக்கு முறைகள் வெற்றி பெறுவதின் மூலக் காரணங்கள் என்ன?//
அடக்குமுறைகள் வெற்றி பெறுவதின் மூல காரணம் நீதி, நேர்மையற்ற ஆட்சியமைப்புதான்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் சுவாதி அக்கா,
//அருமை!
ஒரு சிங்கள மனிதராவது நியாயத்தை உணர்ந்திருக்கிறாரே என்பதில் மனம் ஆறுதலாகிறது.!
இந்த கவிஞரை விட்டு வைத்திருக்கிறார்களா அந்த அரக்கக் கூட்டம் ?? //
கருத்துக்கு நன்றி அக்கா !
அன்பின் விஜி,
////அருமை!
ஒரு சிங்கள மனிதராவது நியாயத்தை உணர்ந்திருக்கிறாரே என்பதில் மனம் ஆறுதலாகிறது.!
இந்தக் கவிஞரை விட்டு வைத்திருக்கிறார்களா அந்த அரக்கக் கூட்டம் ?? //
பொன்சேகாவின் கதியே அப்படியோ, இப்படியோ என்று ஆடிப்போய்க்கிடக்கிறது...
பொல்லாத சித்திரவதை செய்து அனுப்பி வைத்திருப்பார்கள்.
‘நடப்பது அராஜகம்...இதில் என்ன ஜனநாயகம்?//
மிகச் சரி தோழி.. சர்வாதிகாரமும் கூட.
கருத்துக்கு நன்றி தோழி !
Post a Comment