இன்றொரு கவிதை எழுதவேண்டும்
சொல்லும்பொழுதே தாளொன்று
பாதி நிறுத்தப்பட்ட ட்யூட்டொன்று
உம்மென்றிருந்தன எடுக்கும்வரைக்கும்
விடிகாலையில் பாடங்களை மீட்டும் வகுப்பு
ஒன்பது மணிக்கு குழு வகுப்பு
இரவில் விடைதிருத்தும் வேலை
சிவப்புப் பேனையிலிருந்து வழிவது
மனைவியின் முறைப்பு
செஞ்சாயத் தேனீரருந்தியபடி சிற்றுண்டிச் சாலையில்
எழுதிய எளிய கவிதைப் புத்தகத்தின்
கவிதைத் தலைப்புகளே இங்கு
சுவர் முழுதுமிருந்து என்னைப் பார்த்துச் சிரிப்பவை
கரும்பலகையில் வெண்கட்டி போல
தேய்ந்துபோகும் வாழ்விடையே
கவிதைகள் கைவிட்டு நழுவி
எனக்கே மிதிபட்டு அலறும்
சாகித்திய வானிலே கவிதையொன்றைக் கற்பனை செய்கிறேன்
இரவில் வந்து அரை மயக்கத்தில் நித்திரை கொள்கிறேன்
கண்களில் வீழ்கின்றன சந்திரனின் கிரணங்கள்
எவ்வாறு நாளை கவிதையொன்றை எழுதுவேன்
மூலம் - திலீப் குமார லியனகே ( சிங்களமொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி
# சொல்வனம் இதழ் 14, 11-12-2009
# நவீன விருட்சம்
6 comments:
"//கரும்பலகையில் வெண்கட்டி போல
தேய்ந்துபோகும் வாழ்விடையே
கவிதைகள் கைவிட்டு நழுவி
எனக்கே மிதிபட்டு அலறும்//
Nalla varikaL , nalla mozhipeyarppum kooda.
best wishes Rishaan.
நல்லாருக்கு.
ThanX for spreading the essence of other language poems. Nice work you're doing here.
Regards
Hareesh Narayan
அன்பின் மஞ்சுபாஷிணி,
//"//கரும்பலகையில் வெண்கட்டி போல
தேய்ந்துபோகும் வாழ்விடையே
கவிதைகள் கைவிட்டு நழுவி
எனக்கே மிதிபட்டு அலறும்//
Nalla varikaL , nalla mozhipeyarppum kooda.
best wishes Rishaan.//
கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி ! :)
அன்பின் ஏக்நாத் ராஜ்,
//நல்லாருக்கு.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் ஹரீஸ் நாராயண்,
//ThanX for spreading the essence of other language poems. Nice work you're doing here.//
உங்கள் முதல்வருகையும் கருத்தும் மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
Post a Comment