Wednesday, December 19, 2012

எனது குடும்பம்

விடிகாலையிலெழுந்து வேலைக்குப் போகும் அப்பா                         
இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவார்
விடிகாலையிலெழுந்து வேலைக்குப் போகும் அம்மா
இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவார்
விடிகாலையிலெழுந்து பள்ளிக்கூடம் செல்லும் நான்
பள்ளிக்கூடம் விட்டு வகுப்புக்கள் முடிந்து
இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவேன்

எமக்கென இருக்கிறது
நவீன வசதிகளுடனான அழகிய வீடொன்று

- தக்ஷிலா ஸ்வர்ணமாலி
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# எதுவரை - இதழ் - 05, செப்டம்பர் 2012
# உயிர்மை
# நவீன விருட்சம்
# பதிவுகள்
# திண்ணை 

# Artist - Roshan Dela Bandara

2 comments:

மாதேவி said...

இன்றைய கால வாழ்க்கையை அழகாக எடுத்துக் கூறுகிறது கவிதை.

எம்.ரிஷான் ஷெரீப் said...

ஆமாம் மாதேவி. நிறையப் பேருடைய வாழ்க்கை இப்பொழுது அப்படித்தான் இருக்கிறது. நலமா? நீண்ட நாட்களாகக் காணக் கிடைக்கவில்லை?