Wednesday, April 18, 2012

எனது பாதாளத் திரைப்படம் நீ

திரையிட்டுக் காட்டவியலா
பாதாளத் திரைப்படத்திற்கு நிகர்
 நீ
எக்காலத்திலும் வர்ணம் பெற்றிடா
கறுப்பு வெள்ளைக் கனவு
 நீ
கீதமிசைத்துப் பாடிடக் குரலொன்றற்ற
நானெழுதிய அழகிய கவிதை
 நீ
எடுத்துரைக்கப் பெயரறியாத
தாங்கிக் கொள்ள முடியா மலர்வாடை
 நீ

நிசி முழுதும்
பனிக் கண்ணீர் சிதறிட அழுது ஓலமிடும்
தொலைதூர இருள்
முடிவிலியில் மறைந்து செல்லும்
விடியலுக்கு உரித்தற்ற
நிரந்தரமான கனவு
 நீ
நாளையென்றவொன்றைக் காணா
எதிர்பார்ப்புகள் மரணித்துப் போன
எனது வாழ்வின் இக்கணம் நீ

- சந்திமா நிஸ்ஸங்க 
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# உயிர்மை

1 comment:

ஜன்ஸி கபூர் said...

‎// திரையிட்டுக் காட்டவியலா
பாதாளத் திரைப்படத்திற்கு நிகர் நீ
எக்காலத்திலும் வர்ணம் பெற்றிடா
கறுப்பு வெள்ளைக் கனவு நீ //

இவை சுவை தரும் இப் பதிவிலுள்ள சில வரிகள்........ !

கருத்துச் சிதைவின்றி அழகுச் செதுக்கலுடன் ஓர் மொழியிலுள்ள கவிதைகளை இன்னுமொரு மொழிக்கு மாற்றுதல் என்பது கடினமான விடயமே...............
ரிஷான் தொடருங்கள்........................வாழ்த்துக்கள்