முதியோர்
காயமுற்றோர் மற்றும் நோயாளிகள்
குழந்தைகள் - வயதுவந்தோர்
பிணக்குவியல்களை
நிறைய நிறையக் கண்ணுற்றேன்
பாவங்களை ஊக்குவிக்கும்
துறவிகளின் உருவங்களைக் கண்டேன்
*பிரித் நூலும் கட்டப்பட்டது
'நாட்டைக் காக்கும்' எனக்கு காவல் கிட்டவென
பிரார்த்தித்த தகவல்களும் கிடைத்தன தாயிடமிருந்து
விழி சதை இரத்தமென தானம் செய்து
உங்களிடம் வந்துள்ளேன்
ஆனாலும் புத்தரே
உங்களது பார்வை மகிமை மிக்கது
கிராமவாசிகளுக்கு மறந்துபோயிருக்கும்
மனைவி குழந்தைகளோடு
நலம் வேண்டிப் பாடும்
சுகப் பிரார்த்தனைப் பாடலிடையே
எனது தலையை ஊடுருவும்
உங்களது பழக்கமில்லாத புத்தர் விழிகள்
கண்ணெதிரே தோன்றுகின்றனர்
என்னால் கொல்லப்பட்ட மனிதர்கள்
ஆங்காங்கே வீழ்ந்து கிடந்த
அவர்கள் மெலிந்தவர்கள்
துயருற்ற ஏழைகள்
ஒரே நிறம்
ஒரே உருவம்
எல்லோருக்குமே
எனது முகம்
நூறு ஆயிரமென
நான் கொன்றொழித்திருப்பது
என்னையேதானா
பாளிச் செய்யுள்களை இசைக்கின்ற
சிறிய பிக்குகள்
பின்னாலிருந்து
நீங்கள் தரும் புன்முறுவல்
தென்படாதிருக்க இரு விழிகளையும் மூடிக்கொள்கிறேன்
கரங்கள் தென்பட்டு விடுமோ என்ற அச்சத்தில்
வணங்குவதற்குக் கூட உயர்த்தாமலிருக்கிறேன்
* பிரித் நூல் - பாதுகாவல் தேடி, புத்தரை வணங்கி, உடலில் கட்டப்படும் நேர்ச்சை நூல்.
மூலம் - மஹேஷ் முணசிங்ஹ (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி
# உயிர்நிழல் இதழ் - 32, ஏப்ரல் - ஜூன் 2010
# காலச்சுவடு இதழ் - 130, ஒக்டோபர் 2010
# உயிர்மை
# நவீன விருட்சம்
# திண்ணை
14 comments:
அருமை! அருமை! கவிதை அருமை! பகிர்வுக்கு நன்றி!
very nice one ...truly felt desperate words.....
பகிர்வுக்கு நன்றி ரிஷான். கவிதையை எழுதிய அந்த மனிதநேயமுள்ள சிங்களவருக்கு பாராட்டுக்கள்
மொழிபெயர்ப்புக் கவிதைகளிலுள்ள சிரமம் உங்கள் கவிதையைப் பார்த்ததும் புரிகிறது ரிஷான்..!!
மனதார்ந்த வாழ்த்துகள், தொடரட்டும் உங்கள் பயணம்..!!
கருத்துள்ள கவிதை. அருமையான மொழிபெயர்ப்பு.
பகிர்வுக்கு மிக்க நன்றி ஷரீப்
சிங்களர் சிலருக்குக் கூட கொஞ்சம் மனித நேயம் இருக்கிறது என்பதை உங்கள் கவிதை மூலம் தெரிந்து கொண்டேன். அருமையான மொழிபெயர்ப்புக்கு நன்றி.
அன்பின் நம்பி,
//அருமை! அருமை! கவிதை அருமை! பகிர்வுக்கு நன்றி!//
:-)
கருத்துக்கு நன்றி நண்பரே :-)
அன்பின் ஷம்மி,
//very nice one ...truly felt desperate words.....//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி :-)
அன்பின் வியாசன்,
//பகிர்வுக்கு நன்றி ரிஷான். கவிதையை எழுதிய அந்த மனிதநேயமுள்ள சிங்களவருக்கு பாராட்டுக்கள்//
நிச்சயமாக உங்கள் பாராட்டினை தெரிவித்துவிடுகிறேன். நன்றி நண்பரே :-)
அன்பின் ஓவியன்,
//மொழிபெயர்ப்புக் கவிதைகளிலுள்ள சிரமம் உங்கள் கவிதையைப் பார்த்ததும் புரிகிறது ரிஷான்..!!
மனதார்ந்த வாழ்த்துகள், தொடரட்டும் உங்கள் பயணம்..!!//
கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :-)
அன்பின் சொ.ஞானசம்பந்தன்,
//கருத்துள்ள கவிதை. அருமையான மொழிபெயர்ப்பு.//
:-)
கருத்துக்கு நன்றி நண்பரே!
அன்பின் த.நிவாஸ்,
//பகிர்வுக்கு மிக்க நன்றி ஷரீப்//
:-)
நன்றி நண்பரே!
அன்பின் கலையரசி,
//சிங்களர் சிலருக்குக் கூட கொஞ்சம் மனித நேயம் இருக்கிறது என்பதை உங்கள் கவிதை மூலம் தெரிந்து கொண்டேன். அருமையான மொழிபெயர்ப்புக்கு நன்றி.//
நிச்சயமாக சகோதரி..சிங்களவர்கள் எல்லோருமே கெட்டவர்களல்ல..நல்லவர்களும் இருக்கிறார்கள்.
கருத்துக்கு நன்றி சகோதரி :-)
Post a Comment