தின்றுகொண்டு
அவர்கள் ஒன்றாக
வரும்பொழுது
ஒருவாறு
தப்பித்த எனக்கு
கால்களை மேலே போட்டவாறு
இனி
பார்த்துக் கொண்டிருக்கலாம்
ஒருவன் மற்றவனைத்
தின்றுகொள்ளும் போது
குட்டை வால்
எஞ்சும் வரைக்கும்
மூலம் - மஹேஷ் முணசிங்ஹ (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி
# உயிர்மை
# இனியொரு
# நவீன விருட்சம்
18 comments:
ஒருவர்மாறி ஒருவராய் அல்லது ஒன்றாய்ச் சேர்ந்துகொண்டு மக்களைத் தின்று தின்று கொழுத்த அரசியல்வாதிகள், தமக்குள் கடித்துக் குதறிக்கொள்வது தேர்தலின்போதுதானே! மாஷா அல்லாஹ் ! யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் அருமையான கவிதை. தமிழில் அதனை மொழியாக்கம் செய்துள்ள சகோ.ரிஷான் ஷெரீஃபுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்க... வளர்க... தொடர்க...!
தேர்தல் வரை அடித்துக் கொள்ளும் கட்சிகளும், அரசியல் வாதிகளும் தேர்தலுக்குப் பின் ஒன்று சேர்ந்து நம்மைத் தின்பார்கள் என்பதை அழகாகச் சொல்லி விட்டார் கவிஞர்.
அன்பின் நடராஜன் ஐயா,
//தேர்தல் வரை அடித்துக் கொள்ளும் கட்சிகளும், அரசியல் வாதிகளும் தேர்தலுக்குப் பின் ஒன்று சேர்ந்து நம்மைத் தின்பார்கள் என்பதை அழகாகச் சொல்லி விட்டார் கவிஞர்.//
:)
கருத்துக்கு நன்றி ஐயா !
அன்பின் சகோதரி லறீனா அப்துல் ஹக்,
//ஒருவர்மாறி ஒருவராய் அல்லது ஒன்றாய்ச் சேர்ந்துகொண்டு மக்களைத் தின்று தின்று கொழுத்த அரசியல்வாதிகள், தமக்குள் கடித்துக் குதறிக்கொள்வது தேர்தலின்போதுதானே! மாஷா அல்லாஹ் ! யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் அருமையான கவிதை. தமிழில் அதனை மொழியாக்கம் செய்துள்ள சகோ.ரிஷான் ஷெரீஃபுக்கு வாழ்த்துக்கள்.//
கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி.
அன்பின் அப்துல் ஜப்பார் ஐயா,
//வாழ்க... வளர்க... தொடர்க...!//
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா !
குடும்ப அரசியல், அய்யோ அய்யோ குடும்ப அரசியல் என்று குடும்பம் இருப்பவர்கள், இல்லாதவர்கள், இவர்களோடு சேர்ந்த பல குரங்குக் கூட்டங்கள் என்று பலரும் இன்று கூவக் கேட்கிறோம்.....
நல்லதோர் முயற்சி..
அரசியலை ஏமாற்றத்துடன் பார்க்கும் போக்கு மாற்றம் பெற்று, கண்டிப்புடன் பார்க்கும் பிரதிபலிக்கும் போக்கு மக்களிடயே ஏற்படாதவரை அரசியல் ஒரு சாக்கடையாகவே இருக்கும்.
சூழலுக்கேற்ற கவி வரிகள் ரிஷான்.:))
அவங்களே அவங்களை அடிச்சுக்கொண்டு சாகட்டும்.நான் தூர நின்று வேடிக்கை பார்ப்போம்.
வீரையா அல்லது சூரயா.
கொலை செய்தவனா?
கொலை செய்யத் தூண்டியவனா?
அன்பின் Atchu,
//குடும்ப அரசியல், அய்யோ அய்யோ குடும்ப அரசியல் என்று குடும்பம் இருப்பவர்கள், இல்லாதவர்கள், இவர்களோடு சேர்ந்த பல குரங்குக் கூட்டங்கள் என்று பலரும் இன்று கூவக் கேட்கிறோம்.....//
ஆமாம்.. இன்றோடு இந்தக் கூச்சல்கள் முடிவுக்கு வந்துவிட்டால் நிம்மதியாக இருக்கலாம். :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் நண்பருக்கு,
//நல்லதோர் முயற்சி..
அரசியலை ஏமாற்றத்துடன் பார்க்கும் போக்கு மாற்றம் பெற்று, கண்டிப்புடன் பார்க்கும் பிரதிபலிக்கும் போக்கு மக்களிடயே ஏற்படாதவரை அரசியல் ஒரு சாக்கடையாகவே இருக்கும்.//
நிச்சயமாக. ஆனால் அரசின் மக்கள் மீதுள்ள கரிசனம் போய், அதிகாரம் மேலோங்கும் போது மக்களிடம் கண்டிப்புடன் பார்க்கும் போக்கு ஏற்படாதுதானே?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் விஜி,
//சூழலுக்கேற்ற கவி வரிகள் ரிஷான்.:))//
:))
ஆமாம்.. கருத்துக்கு நன்றி தோழி :)
அன்பின் ஜனகன்,
//அவங்களே அவங்களை அடிச்சுக்கொண்டு சாகட்டும்.நாம் தூர நின்று வேடிக்கை பார்ப்போம். //
அதேதான் நண்பரே. இன்று ஜனாதிபதித் தேர்தல் இலங்கையில். என்ன நடக்குமெனத் தெரியவில்லை.
கருத்துக்கு நன்றி நண்பரே !
அன்பின் சுந்தர் ஜி,
//வீரையா அல்லது சூரயா//
இந்தக் கவிதையில் "வீரயா" :)
கருத்துக்கு நன்றி நண்பரே !
அன்பின் விராடன்,
//கொலை செய்தவனா?
கொலை செய்யத் தூண்டியவனா?//
இருவருமே இன்று களத்தில் நிற்கிறார்கள்.
மக்களுக்கு இரண்டு கொலைகாரர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் இக்கட்டான நிலை. :(
கருத்துக்கு நன்றி நண்பரே !
Post a Comment