Tuesday, December 15, 2009

இப்பொழுது நான் வளர்ந்த பெண்




நான் மலராக இருந்தேன். இப்பொழுது கல்.
நான் காற்றைப் போல திரிந்தேன்
இப்பொழுது தேங்கிய நீரோடை போல அமைதியானேன்
தண்ணீரைப் போல பாய்ந்தோடினேன்
இப்பொழுது பனிக்கட்டி போல உறைந்துபோனேன்

பூவாய், காற்றாய், நீராய் இருந்த காலத்தில்
சுதந்திரமாய் ஓடினேன் - பாய்ந்தேன்
கை கால் சுழற்றினேன்
கத்தி அழுதேன் அடித்தொண்டையால்
ஓங்காரமிட்டுச் சிரித்தேன்.
யாரும் அவற்றை நிறுத்தவில்லை
புத்தகங்களைக் கிழித்துப் போட்டேன் கோபம் வந்தவேளைகளில்

அவ்வாறு சுதந்திரம் இருந்த சமயத்தில்
மரங்களேறி மாங்காய் பறிக்க முடியுமாக இருந்தது
அயல்வீட்டுப் பையன்களோடு
நொண்டியபடி பாண்டி ஆடி
ஒளிந்து விளையாடினேன்
அவை குறித்து யாரும் தவறாகப் பேசவில்லை

ஆனால் இன்று?
நான் வளர்ந்த பெண்
சத்தமாகச் சிரிப்பது நல்லதல்ல!
ஓடுதல், பாய்தல் தீயது
ஓசையெழக் கதைப்பது தடுக்கப்பட்டது.
நான் விரிக்கப்பட்ட புகையிலை போன்றவள்
(பொம்பளை சிரிச்சால் போச்சு.
புகையிலை விரிச்சால் போச்சு !)

அமைதி, பொறுமை, பனித்துளி போன்ற தூய்மை
எனக்கு வழங்கப்பட்டுள்ள ஆபரணங்கள்
பேச்சு, சிரிப்பு, பயணம், ஆடைகள்
கண்ணியமாக இருக்க வேண்டியவை
செய்யவேண்டியவை எல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன
நான் கல் - உறைந்த பனி
ஆனால் நான் வளர்ந்த பெண்

மூலம் - ஏ.ஷங்கரீ (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.



நன்றி
# உயிர்மை

39 comments:

பூங்குழலி said...

பொம்பள சிரிச்சா போச்சு ?
:)?

நான் கல் - உறைந்த பனி
ஆனால் நான் வளர்ந்த பெண்

கவிதையின் கருத்தை நன்றாக பதிவு செய்கின்றன இந்த வரிகள் ..வாழ்த்துகள் ரிஷான்

ஃபஹீமாஜஹான் said...

எந்த இனமானாலும் மொழியானாலும் தேசமானாலும் பெண்ணுக்கான கட்டுப்பாடுகள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கின்றன. இந்தச் சிங்கள மொழிக்கவிதை கூட அதைத்தான் சொல்கிறது அல்லவா?

உங்கள் தேடல்கள் விரிவடையட்டும்-
வாழ்த்துக்கள் ரிஷான்.

cherankrish said...

I thought 'this' only for tamils, Sinhalese also doing the same ha?

good work.good work.you have some skills in languages.

கலையரசன் said...

அருமையான வரிகள்..
பாராட்டாமல் என்ன செய்ய சொல்றீங்க?

தேனுஷா said...

இப்படி நான் பார்த்திருக்கேன் நிறையவே பேர் வீட்டுக்குள் அடைப்பட்டதும் பாதுகாப்புடன் வெளியே செல்வதும் அலங்கார பதுமைகளாய் கல்யாணத்துக்கு தயார் படுத்துவதும் கூட

எல்லாம் முட்டாள் தனத்தில் வெளிப்பாடு என்பேன் நான்.

எங்கள் வீட்டில் இப்படி கட்டுப்பாடுகளே கிடையாது சொல்லப்போனால் இப்போதுதான் சுதந்திரமே அதிகமாக இருக்கிறது வளர்ந்த பெண் என்று.

அருமையான கவிதை ரிசான்.

புஷ்பா said...

//நான் கல் - உறைந்த பனி
ஆனால் நான் வளர்ந்த பெண் //
அருமையான கவிதை

அந்த கல்லு்க்கும் இதயம் ஒன்று உண்டே
உறைந்த பனியும் உருகி காட்டாறு போல் ஓடவேண்டும்.

ரா.புஷ்பா

விஷ்ணு said...

அருமையான கவிதை நண்பரே ..

கீதா சாம்பசிவம் said...

கவிதை நன்றாய் இருந்தாலும் தற்காலத்துக்குப் பொருந்தலைனே சொல்லலாமோ???

துரை said...

அருமை ரிஷான்

சொக்கத்தங்கம் said...

நல்லா இருக்குங்க ....

அப்பணா said...

கவிதை நல்லா இருக்கு
ரிஷான்
நீ நல்லா இருக்கியா ?

சின்னு said...

ரிஷான்
உங்கள் படைப்பை சுட்டு


கூட்டுக் கிளி
http://funpass.blogspot.com/2009/12/blog-post_15.html

அருவி போல் இருந்தவள் நான்

அடைபட்டுக் கிடக்கிறேன்







காற்றை போல் இருந்தவள் நான்

கல்லை போல் இருக்கிறேன்





மலரை போல் இருந்தவள் நான்

மணம் இழந்து இருக்கிறேன்





பெரும் சிரிப்புகள் சிதைந்து

புன்னகையாய் ,குறுஞ்ச் சிரிப்பாய்

அதையும் அளந்து பார்த்து

அதட்டி வைக்கும் தாய்




ஓடி ஆடிய என்னை

நாடி வந்த வளர்ச்சி

பாடித் திரிந்த நான்

பல் இளிக்காமல்

பள்ளிக்கு செல்லும் நிலையில் விட



குளத்து நாரையை

கூட்டுக் கிளியாக்கிய வளர்ச்சி

நான் வெறுக்கும் மலர்ச்சி

விஜி said...

பகுத்தறியும் பக்குவம் வந்தவர்களுக்கு ......இந்த வேலிகள் வேண்டியதில்லை.

ஆனால் சுதந்திரம் என்பதன் பொருள் புரியாமல் பலர் அதைச்சின்னாப்பின்னப் படுத்தும் போது .......கட்டுப்பாடுகள் தேவைதானோ என்று சிந்திக்க வைக்கின்றது.

Tamilish Team said...

Hi Rishan,

Congrats!

Your story titled 'இப்பொழுது நான் வளர்ந்த பெண்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 16th December 2009 04:08:03 AM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/153493

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

ரிஷபன் said...

இப்ப நிறைய மாற்றம் வந்தாச்சு.. ரிஷான்.. பெண்களை முன்னைப் போல கூண்டுக்கிளியா வச்சது எண்ணிக்கை குறைஞ்சுருக்கு.. சமுதாயப் பார்வையும் மாறிகிட்டு வருது.. ஆனா கவிதை முழுமையா இருக்கு. அதையும் சொல்லணும்

சப்ராஸ் அபூபக்கர் said...

///அமைதி, பொறுமை, பனித்துளி போன்ற தூய்மை
எனக்கு வழங்கப்பட்டுள்ள ஆபரணங்கள்//// ரசனை மிக்க வரிகள்..... வாழ்த்துக்கள் அண்ணா....

ஜெயா தங்கராஜா said...

அண்ணா உங்களது மொமிபெயர்ப்புக் கவிதையான 'இப்பொழுது நான் வளர்ந்த பெண்' அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

இக்கவிதையினைப் படிப்பதற்காக உங்கள் blog இனுள் சென்றபோது உங்களது blog header இல் உள்ள 'எம்.ரிஷான் ஷெரீப் மொழிபெயர்ப்புகள்' என்னும் தலைப்பில் எழுத்துக்கள் சில மாறி இருப்பதுபோல் தோன்றுகிறது.

நன்றி

நடராஜன் கல்பட்டு said...

அருமையாக இருக்கிறாள் வளர்ந்த பெண்!

angel said...

nan valarntha pen anal satru vithyasamaga suthathirathudan

Mahruful Karki said...

singala mozikvithai thamil aakkam nantraa irukirathu valarntha penpathu kakkap pada vendiyavarkal

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//பொம்பள சிரிச்சா போச்சு ?
:)? //

நான் சொல்லவில்லை. அக் காலம் தொட்டு சமூகம் அப்படித்தான் சொல்கிறது. :(

//நான் கல் - உறைந்த பனி
ஆனால் நான் வளர்ந்த பெண்

கவிதையின் கருத்தை நன்றாக பதிவு செய்கின்றன இந்த வரிகள் ..வாழ்த்துகள் ரிஷான்//

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் ஃபஹீமாஜஹான்,

//எந்த இனமானாலும் மொழியானாலும் தேசமானாலும் பெண்ணுக்கான கட்டுப்பாடுகள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கின்றன. இந்தச் சிங்கள மொழிக்கவிதை கூட அதைத்தான் சொல்கிறது அல்லவா? //

நிச்சயமாக சகோதரி.
அன்றைய காலம் தொட்டு, இக் காலம்வரை இந் நிலை பெரிதாக மாறவேயில்லை. :(

//உங்கள் தேடல்கள் விரிவடையட்டும்-
வாழ்த்துக்கள் ரிஷான்.//

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் சேரன்க்ரிஷ்,

//I thought 'this' only for tamils, Sinhalese also doing the same ha?//

நிச்சயமாக. தமிழர்களை விடவும் அதிக கட்டுப்பாடுகளும், அவல நிலைகளும் சிங்களப் பெண்களுக்கு உள்ளன நண்பரே.

//good work.good work.you have some skills in languages.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் கலையரசன்,

//அருமையான வரிகள்..
பாராட்டாமல் என்ன செய்ய சொல்றீங்க?//

அப்போ பாராட்டுறீங்க? :)
வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் தேனுஷா,

//இப்படி நான் பார்த்திருக்கேன் நிறையவே பேர் வீட்டுக்குள் அடைப்பட்டதும் பாதுகாப்புடன் வெளியே செல்வதும் அலங்கார பதுமைகளாய் கல்யாணத்துக்கு தயார் படுத்துவதும் கூட

எல்லாம் முட்டாள் தனத்தில் வெளிப்பாடு என்பேன் நான். //


நிச்சயமாக..அத்தோடு வளர்ப்பவர்களின் அதீத பாதுகாப்புணர்வும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.


//எங்கள் வீட்டில் இப்படி கட்டுப்பாடுகளே கிடையாது சொல்லப்போனால் இப்போதுதான் சுதந்திரமே அதிகமாக இருக்கிறது வளர்ந்த பெண் என்று.

அருமையான கவிதை ரிசான்.//


நன்றி தோழி :)

M.Rishan Shareef said...

அன்பின் புஷ்பா,

//நான் கல் - உறைந்த பனி
ஆனால் நான் வளர்ந்த பெண்
அருமையான கவிதை

அந்த கல்லு்க்கும் இதயம் ஒன்று உண்டே
உறைந்த பனியும் உருகி காட்டாறு போல் ஓடவேண்டும்.//


நிச்சயமாக சகோதரி. ஆனால் ஓடும் வழிகள்தான் அடைக்கப்பட்டிருக்கின்றன.
கருத்துக்கு நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் விஷ்ணு,


//அருமையான கவிதை நண்பரே .. //


:)
கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் கீதா சாம்பசிவம்,

//கவிதை நன்றாய் இருந்தாலும் தற்காலத்துக்குப் பொருந்தலைனே சொல்லலாமோ???//


இல்லை சகோதரி.
இந் நிலை இக்காலத்திலும் நீடிக்கிறது. இன்னும் மாறவில்லை. எக் காலத்துக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது. :(

கருத்துக்கு நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் துரை.ந,

//அருமை ரிஷான் //

நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் சொக்கத் தங்கம்,

//நல்லா இருக்குங்க ....//

:)
கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் அப்பணா,

//கவிதை நல்லா இருக்கு //

நன்றி நண்பரே :)

//ரிஷான்
நீ நல்லா இருக்கியா ?//

மிகவும் நலம்..நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் நண்பரே?

M.Rishan Shareef said...

அன்பின் சின்னு,

கருத்துக்கும் கவிதைக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் விஜி,


//பகுத்தறியும் பக்குவம் வந்தவர்களுக்கு ......இந்த வேலிகள் வேண்டியதில்லை.//


ஆமாம் தோழி..ஆனால் அவர்களாக இட்டுக் கொள்வதில்லை.. சூழ இருக்கும் காவலர்கள் காப்பதாகச் சொல்லி, வேலியிடுகிறார்கள்.


//ஆனால் சுதந்திரம் என்பதன் பொருள் புரியாமல் பலர் அதைச்சின்னாப்பின்னப் படுத்தும் போது .......கட்டுப்பாடுகள் தேவைதானோ என்று சிந்திக்க வைக்கின்றது.//


கட்டுப்பாடுகள் தேவைதான். ஆனால் அளவுக்கதிகமாகக் கூடாது அல்லவா?

கருத்துக்கு நன்றி தோழி !

M.Rishan Shareef said...

அன்பின் ரிஷபன்,

//இப்ப நிறைய மாற்றம் வந்தாச்சு.. ரிஷான்.. பெண்களை முன்னைப் போல கூண்டுக்கிளியா வச்சது எண்ணிக்கை குறைஞ்சுருக்கு.. சமுதாயப் பார்வையும் மாறிகிட்டு வருது.. //

ஆமாம். ஆனால் சில சமூகங்களிடையே இன்னும் முழுதாக மாறவில்லை நண்பரே !

//ஆனா கவிதை முழுமையா இருக்கு. அதையும் சொல்லணும்//

:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ஜெயா தங்கராஜா,

//அண்ணா உங்களது மொமிபெயர்ப்புக் கவிதையான 'இப்பொழுது நான் வளர்ந்த பெண்' அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.//

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி.

//இக்கவிதையினைப் படிப்பதற்காக உங்கள் blog இனுள் சென்றபோது உங்களது blog header இல் உள்ள 'எம்.ரிஷான் ஷெரீப் மொழிபெயர்ப்புகள்' என்னும் தலைப்பில் எழுத்துக்கள் சில மாறி இருப்பதுபோல் தோன்றுகிறது.

நன்றி //

சில உலவிகளில் திறக்கும்போது சில மாற்றங்கள் காட்டக் கூடும். கவனிக்கிறேன்.
நன்றி சகோதரி. :)

M.Rishan Shareef said...

அன்பின் சப்ராஸ் அபூபக்கர்,

/////அமைதி, பொறுமை, பனித்துளி போன்ற தூய்மை
எனக்கு வழங்கப்பட்டுள்ள ஆபரணங்கள்//// ரசனை மிக்க வரிகள்..... வாழ்த்துக்கள் அண்ணா....//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் நடராஜன் ஐயா,

//அருமையாக இருக்கிறாள் வளர்ந்த பெண்!//

:)
கருத்துக்கு நன்றி ஐயா !

M.Rishan Shareef said...

அன்பின் மஹ்ரூஃபுல் கார்க்கி,

//singala mozikvithai thamil aakkam nantraa irukirathu valarntha penpathu kakkap pada vendiyavarkal//


கருத்துக்கு நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் Angel,

//nan valarntha pen anal satru vithyasamaga suthathirathudan//

:)
வாழ்த்துக்கள் சகோதரி !
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !