Friday, April 23, 2010

நண்பர்களே, பழைய நண்பர்களே...!

உங்களுக்கு
கேட்காத போதிலும்
மலருக்கும் குரலொன்று உள்ளது.

கிள்ளிப்போட்ட பின்னர் காம்பிலிருந்து
எழும் முனகல் கேட்பது
மரத்துக்கு மாத்திரமா?

இறந்தவர்களுக்குக் கூட
வாழ்வொன்று இருப்பதாக
நாம் கூறுகையில்
கண்ணீர்
ஆனந்தத்தில் பிறக்குமென்றா
நீங்கள் சொல்கிறீர்கள்?

காம்பிலிருந்து
பூவைக் கிள்ள முன்பு
உறைந்திருந்தது இதழொன்றின் மீது
குளிர் பனித்துளியொன்று.

அது
மலரின் ஆனந்தமா?
உங்களது குதூகலமா?

மூலம் - மஞ்சுள வெடிவர்தன
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்


நன்றி
# உயிர்மை
# கூடு

3 comments:

தேனுஷா said...

நாம் என்று அடுத்தவர் துன்பத்தைப் பற்றி கவலைப்பட்டோம்?

Unknown said...

new.nanapan.thajudeen,m,i.aslam alaikaum. alam vlvan alla nlakurpi sivnak.

Muruganandan M.K. said...

"இறந்தவர்களுக்குக் கூட
வாழ்வொன்று இருப்பதாக
நாம் கூறுகையில்
கண்ணீர்
ஆனந்தத்தில் பிறக்குமென்றா
நீங்கள் சொல்கிறீர்கள்?.."

அருமையான வரிகள்.

அது ஆனந்தக் கண்ணீர் என்று சொல்லக் கூடிய கயவர்களும் இருக்கிறார்கள்