Wednesday, June 8, 2011

அம்மாவின் நடிகைத் தோழி


அம்மா சொல்வாள்
அந் நடிகையின் நடிப்பைப்
பார்க்க நேரும் போதெல்லாம்

'பள்ளிக்கூடக் காலத்தில்
உயிர்த் தோழிகள் நாம்
அமர்ந்திருந்தோம் ஒரே வகுப்பில்
ஒரே பலகை வாங்கில்
அந் நாட்களிலென்றால் அவள்
இந்தளவு அழகில்லை'

பிறகு அம்மா
பார்ப்பது தனது கைகளை
உடைந்த நகங்களை
காய்கறிகள் நறுக்குகையில்
வெட்டுப்பட்ட பெருவிரலை

அத்தோடு அவள் எங்களைப் பார்ப்பாள்
எனது முகத்தை, தம்பியின் முகத்தை
கண்களைச் சிறிதாக்கிப் புன்னகைப்பாள்
அவளது வதனத்தின் சுருக்கங்களையும் சிறிதாக்கி

மூலம் - இஸுரு சாமர சோமவீர (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# காற்றுவெளி இலக்கிய இதழ்
# உயிர்மை
# திண்ணை

16 comments:

எண்ணங்கள் 13189034291840215795 said...

அவரவர்க்கு வாய்த்த வாழ்வு.. எதுவும் கீழில்லை மேலுமில்லை..

நன்று..

Narathar said...

சமீபத்தில் பார்த்த "ஆகாயப்பூக்கள்" திரைப்படத்தை நினைவூட்டியது இந்த கவிதை...

Ashwin-WIN said...

அருமை. நல்லதொரு பகிர்வு. தாயின் முகம் கண்முன்னே வந்து போகிறது.

shammi's blog said...

அருமையான பகர்வு ....

Aren said...

நெஞ்சை என்னவோ செய்கிறது. அருமையான கதை.

கீதம் said...

அவளினும் இவள் வாழ்க்கை அழகு என்று திருப்தி அடைந்து புன்னகை பூக்கிறாளோ? கவிதை சொல்லாமல் சொல்வது அதிகம். பாராட்டுகள் ரிஷான் ஷெரிப் அவர்களே.

அக்னி said...

அரிதாரம் தொலைத்தது,
நட்பின் முகவரியும்...
நடிகையின் முக வரியும்...

உரியவருக்கும் தந்தவருக்கும் பாராட்டுக்கள்...

M.Rishan Shareef said...

அன்பின் சாந்தி அக்கா,

//அவரவர்க்கு வாய்த்த வாழ்வு.. எதுவும் கீழில்லை மேலுமில்லை..

நன்று..//

நிச்சயமாக.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் நாரதர்,

//சமீபத்தில் பார்த்த "ஆகாயப்பூக்கள்" திரைப்படத்தை நினைவூட்டியது இந்த கவிதை...//

:-)
சம்பந்தப்பட்ட நடிகையும் 'ஆகாயப் பூக்களில்' நடித்த பிரதான நடிகைதான்.

கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் அஷ்வின்,

//அருமை. நல்லதொரு பகிர்வு. தாயின் முகம் கண்முன்னே வந்து போகிறது.//

பெண்கள் தாயான பிறகு, அவர்களின் தோழிகளை எளிதில் மறந்துவிடுகிறோம். தந்தைமாரின் தோழர்களைக் கொண்டாடுகிறோம். :-(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ஷம்மி,

//அருமையான பகர்வு ....//

:-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி !

M.Rishan Shareef said...

அன்பின் Aren,

//நெஞ்சை என்னவோ செய்கிறது. அருமையான கதை.//

கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் கீதம்,

//அவளினும் இவள் வாழ்க்கை அழகு என்று திருப்தி அடைந்து புன்னகை பூக்கிறாளோ? கவிதை சொல்லாமல் சொல்வது அதிகம். பாராட்டுகள் ரிஷான் ஷெரிப் அவர்களே//

கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef said...

அன்பின் அக்னி,

//அரிதாரம் தொலைத்தது,
நட்பின் முகவரியும்...
நடிகையின் முக வரியும்...

உரியவருக்கும் தந்தவருக்கும் பாராட்டுக்கள்...//

அழகான கருத்து. உங்கள் பாராட்டினை உரியவரிடம் தெரிவித்துவிடுகிறேன்.
கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே !

நாஞ்சில் த.க.ஜெய் said...

மழலை சிரிப்பு கவலையின் மருந்து..அருமை நண்பரே.

M.Rishan Shareef said...

அன்பின் ஜெய்,

//மழலை சிரிப்பு கவலையின் மருந்து..அருமை நண்பரே..//

நிச்சயமாக நண்பரே.
கருத்துக்கு நன்றி !