சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்த மனைவியை
கடந்த ஓர் தினம் மீண்டும் எனக்கு காணக் கிடைத்தது
சனிக்கிழமை சந்தைக்கு
வந்திருந்தாய் நீ
கைக்குழந்தையை இடுப்பில்
சுமந்தபடி
நுனிவெடித்த செம்பட்டைக்
கூந்தலுக்கு
தேங்காயெண்ணெய் தடவிப்
பின்னலிட்டு
அவரை, வெண்டி, நெத்தலி,
பெரிய வெங்காயம், பச்சைமிளகாய்
பை நிறைய வாங்கிக் கொண்டு
நீ செல்கையில்
கூட்டத்தினிடையே நுழைந்து
நுழைந்து
உன் பின்னாலேயே வந்தேன்
நானும்
நீ காணவில்லை
'பொருட்களை வாங்கும்வரைக்கும்
கைக்குழந்தையை வைத்திருக்கட்டுமா?
இல்லாவிட்டால் காய்கறிப்பையை
தூக்கிக் கொள்ளட்டுமா?
நீ மிகவும் சிரமப்படுகிறாய்'
என
கூற வேண்டுமெனத் தோன்றியபோதும்
கூறி விட இயலவில்லை என்னால்
- தக்ஷிலா ஸ்வர்ணமாலி
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி- தளவாசல், ஊடறு, தமிழ் எழுத்தாளர்கள் இணையத்தளம், வார்ப்பு, பதிவுகள்
Painting - Jen Adam
Painting - Jen Adam
7 comments:
ஆஹா... நல்ல கற்பனை.
:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்...
Wonderful
நல்ல முயற்சி !!
வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி அன்பு நண்பர்கள் ஆரூர் பாஸ்கர் & Lightgreen :)
பாசம் தொடரும்
இறக்கம் இதயத்தின் இணக்கம்
வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி அன்பு நண்பர் முஹம்மத் அலி ஜின்னாஹ் :)
Post a Comment