Friday, November 4, 2011

விவாகரத்தின் பின்னர்

உயர்ந்திருக்கும் அம் மலையின் உச்சி மீது
வெற்றுப் பார்வையுடன் ஒரு பெண்
அவளது இரு புறமும்
சிறு குழந்தைகளிரண்டு

கீழே
முற்புதர்கள் கற்சிதறல்கள்
நாகம், விரியன், மலைப்பாம்புகள் நிறைந்திருக்கும்
பாதாளம்
அகன்ற வாயைத் திறந்துகொண்டு

அவளது தலைக்கு மேலே
இரவின் கனத்த இருட்டு
ஊளையிடும்
மழையும் கோடை இடியும்
வெற்றியுடன் ஒன்றிணைந்து

ஏற்றி விட்டவர் எவரோ
இவளை
இந்த மா மலை மீது

மெதுவாகக் காலடியெடுத்து வைத்தபடி
கீழ் விழிகளால் இருபுறமும் பார்த்தபடி
அவளைக் கைவிட்டு அவர்களெல்லோரும் சென்றுவிட்டாலும்

கீழே மரக் கிளையொன்றில்
மறையக் காத்திருக்கும் சூரிய ஒளியில்
பிசாசொன்றைப் போல காற்றுக்கு அசையும்
இற்றுப் போன புடைவைத் துண்டொன்று

சீராக முட்புதர்களை வெட்டியகற்றி
பாதையொன்றை அமைத்தபடி
இந்தக் கொடுமையிலிருந்து தப்பித்து
நாளைக் காலையில்
அவள் வருவாளா ஊரொன்றுக்கு

நாளைய சூரியன் உதிக்கும் வேளை
இருக்குமோ
அவளது ஆடையும்
மரத்தின் கிளையொன்றில் சிக்கியபடி

மூலம் – சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (சிங்கள மொழியில்)
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
#  மறுபாதி - கவிதைகளுக்கான இதழ் - 06 , வைகாசி-ஆவணி 2011
# ஊடறு
# திண்ணை 

6 comments:

பூங்குழலி said...

ஏற்றி விட்டவர் எவரோ
இவளை
இந்த மா மலை மீது

மனதை தொட்ட வரிகள் ரிஷான் ...

Purujoththaman Thangamayl said...

யதார்த்தம் தெறிக்கும் வரிகள் ரிஷான். மொழிபெயர்பு அந்த வீரியத்தைக் கொண்டிருக்கின்றன!

Ilaiyanila Fazmina Ansar said...

நாளைய சூரியன் உதிக்கும் வேளை
இருக்குமோ
அவளது ஆடையும்
மரத்தின் கிளையொன்றில் சிக்கியபடி......அருமையாக உண்மையை உரைக்கும், யதார்த்தம் ததும்பும் வரிகள்...... வாழ்த்துக்கள்!

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//ஏற்றி விட்டவர் எவரோ
இவளை
இந்த மா மலை மீது

மனதை தொட்ட வரிகள் ரிஷான் ..//

நலமா?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :-)

M.Rishan Shareef said...

அன்பின் Purujoththaman Thangamayl, அருமையான கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் Ilaiyanila Fazmina Ansar, ஊக்கம் தரும் கருத்துக்கும், அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !