Thursday, March 3, 2011

ட்ரோஜனின் உரையாடலொன்று

இது என்ன விசித்திரமான தேசம்
கைக் குழந்தைகள் தவிர்த்து
ஆண் வாடையேதுமில்லை
எல்லோருமே பெண்கள்
வயதானவர்கள்
நடுத்தர வயதுடையோர்
யுவதிகள்
எல்லோருமே பெண்கள்

விழிகளில் வியப்பைத்தேக்கிய நண்பா!
பாழ்பட்டுச் சிதைந்து வெறுமையான
இவ் விசித்திர நகரில்
எஞ்சியுள்ள
எல்லோருமே விதவைகள்

எமக்கெனவிருந்த கணவர்களைத் தந்தையரைச்
சகோதரரைப் புத்திரர்களை
சீருடை அணிவித்து
வீரப் பெயர்கள் சூட்டி
மரியாதை வேட்டுக்களின் மத்தியில்
புதைத்திட்டோம்
செத்துப்போனவர்களாக

மூலம் - சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்


நன்றி
# மறுபாதி முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்
# உயிர்மை
# ஊடறு
# திண்ணை
# நவீன விருட்சம்
# கீற்று
# பெண்ணியம்

4 comments:

Ashwin-WIN said...

Nice work.
Ashwin Arangam

Ashwin-WIN said...

Nice work.
Ashwin Arangam

Ashwin-WIN said...

Nice work.
Ashwin Arangam

Ilakkuvanar Thiruvalluvan said...

மொழி பெயர்க்கப்பட்டவற்றின் மூல மொழி, மொழி பெயர்ப்பு ஒன்றில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டிருந்தால் அதன் விவரம் ஆகியவ்ற்றையும் தெரிவிப்பது நன்று. முயற்சிக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி!/