Tuesday, November 2, 2010

காவலரணிலிருந்த இராணுவ வீரனுக்குத் தங்கம்மா சொன்ன கவிதை


முதியவளான என்னில்
துப்பாக்கிக் கத்தியால் குத்திக் குத்தி
என்ன தேடுகிறாய் பிள்ளையே
வெடிப்புக்கள் கண்டு பால் வரண்ட மார்புகளன்றி
வேறெவை சுருக்கங்கள் விழுந்த என்னிடம்

வெடிக்கக் கூடியவை அனேகம்
பலவீனமான என் நெஞ்சுக்குள் உள்ளன
தென்படாது உன் இதயத்துக்கு அவை
நானும் உன் மத்தியில் இன்னுமொரு தாய்தான்

உன் புன்சிரிப்பைக் காணவென
பாசத்தின் ஈரத்தை நிரப்பி
உனை நோக்கிப் புன்னகைக்கிறேன்
உனது வதனத்திலொரு மாற்றத்தைக் காண இயலாவிடினும்
இச் சீருடையைக் களைந்ததன் பின்னர்
எப்பொழுதேனுமுனக்கு
புன்முறுவல் தோன்றுமென்பது நிச்சயம்

மூலம் - தர்மசிறி பெனடின்
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், 

இலங்கை


நன்றி
# காலச்சுவடு இதழ் - 130, அக்டோபர் 2010
# உயிர்மை
# ஊடறு
# திண்ணை
# ரவி (ஓவியம்)

4 comments:

Thenusha Eswaram said...

சீருடையில் இருப்பவர்கள் உதடுகள் விரியும் இளம் பெண்களை காணும் போதுதான் போல.

M.Rishan Shareef said...

அன்பின் தேனுஷா,

//சீருடையில் இருப்பவர்கள் உதடுகள் விரியும் இளம் பெண்களை காணும் போதுதான் போல.//

ஆமாம் தோழி..அதுதான் நடக்கிறது உலகெங்கும் :-(

கருத்துக்கு நன்றி தோழி !

விஜி said...

இப்படியெல்லாம் சிந்தித்து எழுதுபவர்கள் இருக்கின்றார்களா?

தமிழாக்கம் மிக நன்று ரிஷான்.

M.Rishan Shareef said...

அன்பின் விஜி,

//இப்படியெல்லாம் சிந்தித்து எழுதுபவர்கள் இருக்கின்றார்களா?//

நிச்சயமாக இருக்கிறார்கள் தோழி.. சென்ற மாத காலச்சுவடு இதழில் இவ்வாறான எனது மொழிபெயர்ப்புக் கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன பாருங்கள்.

//தமிழாக்கம் மிக நன்று ரிஷான்.//

மிகவும் நன்றி தோழி :-)